ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!
ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அந்த இளம் பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மேகாஶ்ரீ என்பது தெரியவந்தது.
இவர் டெல்லியில் எம்.டெக் , பி.எச்.டி முடித்து விட்டு ஐ ஐ டி விடுதியில் தங்கி மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மாணவி இந்த இடத்திற்கு எதற்காக வந்தார் ,ரயிலில் செல்லும் பொழுது தவறி கீழே விழுந்தார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.