கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை ,சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள மங்கலம்மபுரத்தை சேர்ந்த மேச்சேரி மற்றும் இவரது மனைவி பச்சையம்மாள்(22) கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் உறவினரின் மகனான 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சென்று பச்சையம்மாளிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு, பச்சையம்மாள் தீப்பெட்டி இல்லை என்று கூறி அங்கிருந்த சிறுவனே வீட்டை விட்டு செல்ல கூறியுள்ளார்.
அடுத்த நாள் பச்சையம்மாள் வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அந்த சிறுவன் உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி கொண்டு பச்சையம்மாளை சுட்டுள்ளார். அதில் பச்சியம்மாளுக்கு இடது கை ,வலது முழங்கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.மேலும் பச்சையம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அந்த சிறுவன், துப்பாக்கியை வீதியில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டான்.பச்சையம்மாளை, அங்கிருந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த சிறுவன் சுட்டதை குறித்து கொடுத்துள்ளனர். புகாரின் பெயரில் கிருஷ்ணகிரி நகர காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கிர்த்தி என்பவர், சிறுவன் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தப்பியோடிய அந்த சிறுவனுக்கு துப்பாக்கி எப்படி வந்துள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுவனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.