கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா?
கோவை மாவட்டத்தில் பெரிய கடைவீதியில் வசித்து வந்தவர் இளம் பெண் வயது (19). அதே தெருவை சேர்ந்த அசோக் குமார் (23) இவர்கள் இருவரும் நண்பராக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது ரெண்டு பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் அந்த இளம் பெண் ஆறு மாத காலங்களாக அசோக் குமாரிடம் பேசுவதையும் பழகும் நிறுத்திவிட்டார்.
நேற்று காலை அந்த பெண் துடியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதால் வேலைக்கு செல்வதற்காக என் ஜி ஒ காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். பேருந்து நிலையத்திற்கு வந்த அசோக் குமார் அந்த இளம் பெண்யை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அழைத்தார். அப்போது அந்தப் பெண் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் மறுத்துவிட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த அசோக் குமார் அவர் வைத்திருந்த ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கி விட்டு கொலை மிரட்டலும் விடுத்து அங்கிருந்து சென்றார். அதனால் அந்த பெண் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில் தன்னை திருமணம் செய்ய அழைத்ததாகவும் நான் ஒப்பு கொள்ளாததால் ஹெல்மெட்டால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் அசோக் குமாரை கைது செய்தனர். மேலும் அசோக் குமாரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.