Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசையை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி நண்பர்களுக்கும் தன்னுடைய காதலியை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணுடன் அதே பகுதியில் இருக்கும் பெருமாள் நகரை சேர்ந்த 27 வயதுடைய ஹரிஹரன் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இது இருவருக்குமிடையே காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் காதலியை தன்னுடைய மருந்து குடோனுக்கு வருமாறு ஹரிஹரன் அழைத்துள்ளார்.காதலனின் அழைப்பு ஏற்று குடோனுக்கு சென்ற அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருக்க சம்மதிக்க வைத்துள்ளார்.

இவ்வாறு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை மறைத்து வைக்கப்பட்ட கேமரா மூலமாக வீடியோ எடுத்துள்ளார்.இதனையடுத்து இந்த வீடியோவை காட்டியே அடிக்கடி உல்லாசத்திற்கு வர வைத்துள்ளார்.வரவில்லை என்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

தன்னை அவன் உண்மையாக காதலிக்கவில்லை என்று புரிந்து கொண்ட அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் அவன் கூப்பிடும் போதெல்லாம் சென்றுள்ளார்.இந்நிலையில் அவன் அந்த வீடியோவை அவனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளான்.

இதனைதொடர்ந்து அவனது நண்பர்களான மாரி,மாடசாமி,கோபி, அகிலன், பிரவீன் பரணி,ஜீனத் அகமது உள்ளிட்டோர் வீடியோவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.இந்த வீடியோவை வைத்து மிரட்டி மாடசாமி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து வீடியோவை வைத்துக்கொண்டு மாரி,கோபி,அகிலன்,பிரவீன்,ஜீனத் அகமது உள்ளிட்டோரும் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.நாளடைவில் இவர்களது மிரட்டல் அதிகரித்த நிலையில் வேறு வழியில்லாமல் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.இந்நிலையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த 8 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.இதில் ஜீனத் அகமது அப்பகுதியின் திமுக இளைஞர் அணி அமைப்பாளராக வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பி வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி நண்பர்கள் பலருக்கும் காதலியை விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version