காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

Photo of author

By Hasini

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

காதல் என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது. காதலித்த இருவரில் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காதலன் அவருடன் எடுத்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவரை வெளுத்து வாங்கிய உறவினர்கள். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு, இனஸ்டாகிராம் வலைதளம் மூலம், சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்ற 27 வயதானவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அது நாளடைவில் காதலாக  மலர்ந்துள்ளது. மேலும், காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்த நிலையில், இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, பெண்ணிற்கு வேறொரு திருமணம் முடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதை அறிந்த காதலனோ அந்தப் பெண்ணுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண்ணின் திருமணம் தடைபட்டது. எனவே பெண்ணின் உறவினர்கள் பெண்ணை வந்து அழைத்துச் செல்லுமாறு பெண்ணின் மூலமே அவனிடம் தகவல் தெரிவித்தனர். எனவே மகிழ்ச்சியுடன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு  பெண்ணை அழைத்துச் செல்ல வந்தான். அவனுக்கோ பெண்ணின் உறவினர்கள் பட்டாளம்  அடி வெளுத்தனர். அதை பார்த்த அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடி போய் விட்டனர்.

அதன் காரணமாக அவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் தன்னுடைய படங்களை இணையத்தில் பதிவிட்டதன் காரணமாக அந்த பெண் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த மாணவி அளித்த புகாரை எடுத்துக்கொண்ட எரியோடு போலீசார், புகாரை பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version