Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தன் காதலிக்காக பாகிஸ்தான் எல்லை வரையும் சென்ற காதலன்!!

தனது மகன் சித்திக் மொஹம்மத் ஷிசானை காணவில்லை என்று அவருடை தந்தை மொஹம்மத் சித்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஹிசானின் மொபைலின் லொகேஷன்-யை டிராக் செய்தனர்.

அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையோற பகுதியான டொலவிரா கிராமத்தை லொக்கேஷன் காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் BSF படையினர் அவ்விடைத்தை அடைந்தனர்.

அப்பொழுது ஹ்சான் பாகிஸ்தான் எல்லைக்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாக இருக்கும் ரன் என்ற பகுதியில் உண்ண உணவின்றி, தண்ணீரின்றி வறட்சியால் சோர்வடைந்து மயக்க நிலையில் சுமார் 2 மணி நேரம் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஷிசானை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த BSF வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை காண கூகுள் மேப் உதவியின் மூலம் நான் இவ்விடத்தை அடைந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தார். இவர் சுமார் 1200 கிலோ மீட்டர் தொலைவை கடந்து பயணம் செய்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரர்கள் அவருக்கு இனி இது போல் செயலை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவரிடம் தொடர்ந்து BSF அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version