Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பான்டனால் ஈரநிலக் காடுகளை காப்பாற்றக் கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!

தென் அமெரிக்காவில் உள்ள பான்டனால் என்கின்ற ஈரநில தன்மை கொண்ட அடர்ந்த காடு, கடந்த சில மாதங்களாக எரிந்து கொண்டு வருகிறது. உலகிலுள்ள பெரிய காடுகளில் இந்த காடும் ஒன்றாகும். அதுமட்டுமன்றி இந்த ஈரநில தன்மை கொண்ட காடுகள் கடந்த சில மாதங்களாக எரிந்து வருவதை உலகநாடுகள் கண்டுகொள்ளவில்லை என்று பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தப் பான்டனால் ஈரநில காடுகள் எரிந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அந்த மையம், தற்போது வரையிலும் இந்த காடுகளில் 28 விழுக்காடு எரிந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. 

இக்காடுகள் கார்பன் சுழற்சியில் பெருமளவிளான முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் இக்காடுகளை பாதுகாப்பது அவசியம் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த பான்டனால் காடுகளானது, காற்றுடன்  இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக அளவு உறிஞ்சுகிறது. இதனால் கார்பன் சுழற்ச்சிக்கு இக்காடு முக்கிய பங்கு வகிக்கிறது. கலிபோர்னியா மற்றும் அமேசான் காடுகள் போன்றவற்றை பாதுகாப்பது போல் இக்காடுகளையும் பாதுகாக்க கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version