தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0
255
#image_title

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக அமைந்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூகநீதியும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் மூலம் பள்ளி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கொரோனா காலகட்டத்தில் கல்வியை இழந்த மாணவிகளை இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்த இயக்கம் திராவிட முன்னேற்ற இயக்கம் என்று பெருமிதம் தெருவித்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திமுக என்பது அரசியல் கட்சி அல்ல என்றும் திமுக ஒரு மக்கள் இயக்கம் என்று தெருவித்தார். மேலும் நடைபாதை கல்வி மூலமாக கல்வி அரிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நாடாக நார்வே நாடு உள்ளதாகவும், அதே போன்று தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பாட்டு வருவதாக கூறிய அமைச்சர் உலகத்துக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தற்பொழுது வெளியிட்டுள்ள நூல் கல்வியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் நார்வே பின்லாந்து ஆகிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக்கான திட்டங்களை அறிவதற்கு இப்புத்தகம் பயன்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகள் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், நூலாசிரியர் முனைவர் விஜய் அசோகன், ஆழி பதிப்பகத்தின் உரிமையாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட கல்வியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.