தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்!! விசாரணையில் அதிர்ச்சி!!

0
64
The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!! The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!!

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு போனை “சுவிட்ச் ஆஃப்” செய்துவிட்டு மணமகன் ஓடியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் திருமணதிற்கு நேரமான நிலையில்  மணமகள் காலை 9.00 மணி அளவில் மணமேடைக்கு வந்தார். ஆனால் அதற்கு முன்னரே மணமகன் முடி வெட்ட வேண்டும் என பெற்றோர்களிடம் கூறிவிட்டு சலூன் கடைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மணமகன் வரவில்லை. அப்போது முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. இதனால் பதற்றம் அடைந்து மணமகனுக்கு போன் செய்துள்ளார்கள்.

ஆனால் போன் சுவிட்ச் ஆஃப் என வந்ததால் இருவீட்டாரும் அதிர்ந்து போனார்கள். மேலும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவருக்கும் இந்த சம்பவம் மிக அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் இரு வீட்டாரும் காலை 10.30 மணி வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அறிந்த மணமகள் வேதனையில் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அந்த திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.