வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்!
தற்போது பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு இயற்கை சீற்றங்கள் மற்றும் இயற்கை உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதே போல் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தின் காரணமாக மூழ்கி விட்டது. தற்போது அந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். தற்போது ஊரடங்கு தளர்த்தி உள்ளதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
அவர்கள் இந்த வெள்ளத்தின் காரணமாக மிகவும் அவதியுற்றனர். அதன் காரணமாக இது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்து அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு போலீசாரும், தீயணைப்பு படையினரும் கயிற்றை கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு மீட்கப்பட்ட மக்கள் மீட்புக் குழுவினருக்கும், போலீசாருக்கும் நன்றிகளை தெரிவித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.