Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் – வைகோ!!

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் – வைகோ!!

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் விவகாரத்தில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டாக பல தலைவர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் திருப்பத்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக தலைமை கழகச் நிலைய செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்

மதிமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காளிலிங்கன் இல்ல திருமண திருவிழா மற்றும்

அண்ணாமலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள மதிமுக அலுவலக திறப்பு விழாவில் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர்

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய துரை வைகோ

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக சிதறி கிடக்கிறது. இதனால் யாருக்கு நன்மை என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடியது.

சில மாநிலங்களில் தேர்தல் நடக்கப் போகிறது அந்த தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டாக பல தலைவர்கள் கருதுகின்றனர் ‌

தமிழகத்திற்கு எந்த ஒரு முக்கிய அறிவிப்பும் இல்லை நிதியும் ஒதுக்கப்படவில்லை விவசாயிகளுக்கு நிதி இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி பல மாதங்கள் ஆகியும் அதற்கான நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் விவகாரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட் தமிழகத்தை பொறுத்தவரை ஏமாற்றம் அளிக்கக் கூடிய பட்ஜெட் என குற்றம் சாட்டினார்

மேலும் ஈரோடு கிழக்கு பகுதி நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன் அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version