Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திரன் மற்றும் வீரேந்திரன் என்பவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு தர்மேந்திரனுடைய எருமையை வீரேந்திரன் திருடி விட்டதாகவும்,வீரேந்திரனுடைய எருமையை தர்மேந்திரன் திருடி விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கில் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பி இருந்தனர்.இறுதியில் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்து விட்டனர்.அதாவது தர்மேந்திரன் மற்றும் வீரேந்திர ஆகிய இருவரையும் எதிர் எதிராக நிற்க வைத்துவிட்டு எருமையை கூப்பிட சொன்னார்கள்.அவ்வாறு இருவரும் எருமையை கூப்பிடும் பொழுது எருமையானது உண்மையான உரிமையாளரான தர்மேந்திரனிடம் சென்றுள்ளது.பின்பு எளிதாக அவர்தான் உரிமையாளர் என்று எருமையை வைத்து காவல் துறையினர் கண்டுபிடித்து எருமையை தர்மேந்திரனிடமே ஒப்படைத்தனர்.மனிதர்களை விட விலங்குகளுக்கு அன்பு அதிகம் என்பது இந்த செய்தி உணர்த்திவிட்டது.

Exit mobile version