வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா?

0
223
The bull that broke into the bank!! Who came as a hero and pulled the rope? Saved?

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா?

இஸ்ரேஸ் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே உள்ள டோட் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வந்து செல்வதுமாக இருப்பார்கள்.இந்நிலையில் நேற்று அந்த வங்கி அலுவலகத்திற்குள் ஒரு காளை திடிரென உள்ளே புகுந்தது.

இதை கண்டதும் அலுவலகத்தில் ஹால் பகுதியில் உள்ள எதிர் முனையில் இருக்கும் ஒரு பெரிய சுவருக்கு பின்னால் அனைவரும் ஒளிந்து கொண்டனர்.உடனே அங்கிருந்த ஒரு நபர் கையில் கிடைத்த ஆரஞ்சு நிறம் கொண்ட பொருளை வைத்து லாபகமாக அந்த காளையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் அந்த காலை அவருக்கும் பயப்படாமல் முட்ட வந்ததால் அந்த நபர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.உடனே அங்கு மறைந்திருந்த நபர்கள் சிலர் கயிற்றை தூக்கி வீசி அந்த நபரை உள்ளே இழுத்து கொண்டனர்.பல மணி நேரம் அந்த காளை அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தது.பின் ஒருவழியாக அந்த வங்கியிலிருந்து வெளியேறியது.

அங்கிருந்து சென்ற காளை சாலையில் நடந்து சென்றவர்களை அச்சமூட்டியது.இதனால் பலரும் சாலையில் செல்லாமல் பயந்து நடுங்கி ஒளிந்து கொண்டனர்.மேலும் அங்கிருந்த கார்களை மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது.கண்ணில் தென்படும் பொருட்களை எல்லாம் முட்டி தள்ளியது.

இதன்பின் தகவல் அறிந்து வந்த கால்நடைத்துறை ஊழியர்கள் காளை இருக்கும் இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காளையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின் காளையை காட்டிற்குள் விட கட்டிப்போட்டு லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்கள் ஏற்படாமல் மற்றும் அதிக சேதம் ஏற்படாமலும் இருந்தது என வங்கி ஊழியர் தெரிவித்திருந்தனர்.மேலும் இந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.வங்கிக்குள் காளை புகுந்ததால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது .