எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள்
சமீப காலமாக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்துவது அதிகமாகி கொண்டே வருகிறது.இதற்கு உயர்ந்துவரும் பெட்ரோல் விலையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவ்வாறு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் பைக் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் தான் அதன் மீது அச்சம் ஏற்படும் வகையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றன.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வந்தன.இந்த சம்பவங்களை பார்த்த வாகன ஓட்டிகளுக்கு எலெக்ட்ரிக் பைக் மீதான அச்சமும் ஏற்பட தொடங்கியது.பெட்ரோல் விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை எலெக்ட்ரிக் பைக் வேண்டாம் என்று புலம்பும் அளவிற்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல பெட்ரோல் பைக்கும் தீப்பிடித்து எரியும் என்ற வகையில் ஒரு சம்பவம் நடந்தது வாகன ஓட்டிகள் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.மயிலாடுதுறையில் கல்லுரி மாணவன் பைக் தீப்பிடித்தது தான் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தனியார் கல்லுரியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் தனது படிப்பை முடித்து புல்லட் பைக்கில் சிறிது தூரம் சென்ற போது இன்ஜின் பகுதியில் உள்ள வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதை கவனித்த அந்த மாணவர் புல்லட்டை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த ஒயரை பிடிங்கியுள்ளார்.
ஓயரை பிடுங்கி விட்டால் தீப்பற்றாது என நினைத்து அதை செய்த நிலையில் இன்னும் அதிகமாக தீப்பரவியது.இதனால் அச்சமடைந்த அந்த மாணவர் தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைக்க முயன்றும் அணையவில்லை .
இதையடுத்து அருகிலிருந்த மணலை கொட்டி ஒருவழியாக நெருப்பை அணைத்திருக்கிறார். இந்த சம்பவத்தால் ஒருவருக்கும் பாதிப்பு இல்லையென்றாலும் வாகனத்திற்கு சேதம் ஏற்ப்பட்டது.
புல்லட் வாகனம் தீப்பிடிக்க காரணம் என ஆராயப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலமான தற்போது நிலவும் அதிக வெப்பமும்,பெட்ரோல் முழுமையும் இதற்கு ஒரு காரணமாக கருதபடுகிறது.
ஏற்கனவே எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து வந்துள்ள நிலையில் தற்போது பெட்ரோல் பைக் தீப்பிடித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.