Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

குளிர்காலம் ஓய்ந்த நிலையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகின்றது. மே மாதத்தை போலவே வெயில் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையை வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேறுபாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரி சபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர், மேலும் அந்த கூட்டத்தில் அடுத்த சில மாதங்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது, அதுமட்டுமின்றி  பருவமழை குறித்தும் முக்கியமான பயிர்களின் சாகுபடி எந்த அளவிற்கு இருக்கும் என அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

அதையடுத்து போதிய உணவு தானியங்களை இருப்பு வைக்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என  தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவசர நிலையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகளின் தயார் நிலை பற்றியும் பிரதமர் மோடிக்கு விளக்கமாக கூறப்பட்டது.

அதிகமான வெப்பத்தால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் அவற்றை தணிப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறுகையில். இந்த வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தினம் தோறும் மாநில அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் அதனையடுத்து டிவி செய்திகள் சேனல்களும், பண்பலை வானொலிகளும் தினந்தோறும் சில நிமிடங்கள் ஒதுக்கி அவற்றை வாசிக்க வேண்டும்.

அதன் மூலம்தான் மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள் என கூறினார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். மேலும் நீர் பாசனங்களுக்கான தண்ணீர் வினியோகம், கால்நடை தீவனம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அதிகபட்ச வெப்பநிலை நிலவும் போது என்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை துண்டு பிரசுரங்கள், சினிமாக்கள் உள்ளிட்டவை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.

காட்டு தீ பரவுவதை தடுக்க வேண்டும். மீறி காட்டுத் தீ  பரவினால் உடனடியாக அணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்.

Exit mobile version