Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்!

The bus crashed like an apple near Talivasal! College students in intensive care!

The bus crashed like an apple near Talivasal! College students in intensive care!

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்!

சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி  பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் கரும்பு லோடு ஏற்றி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிராக்டரின் பின்பக்கம்  மோதியது. அப்போது பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது.

அந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட  22  பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். விபத்தில் சிக்கிய பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து டிரைவர் மீது வழக்குபதிவு செய்தனர்.

Exit mobile version