சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!!
விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது,
மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாக்பூர் நகரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று புனேவை நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 1 மணி அளவில் புல்தானா மாவட்டம் சிந்த்கத்ராஜா அருகே சம்ருத்தி விரைவு சாலையில் சென்ற போது திடீரென டயர் வெடித்ததில் சாலையில் உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்தவர்களில் 25 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி புல்தானா எஸ்பி சுனில் கடஸ்னே கூறுகையில்,
இன்று அதிகாலை இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. பேருந்து டயர் வெடித்ததில் கம்பத்தில் மோதி, அடுத்து டிவைடரில் மோதி கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 33 பேரில் 25 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். மீதமுள்ள பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழக்க பலி எண்ணிக்கை 26 பேர் ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இறந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரமும் தேசிய நல நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலா 5 லட்சம் ரூபாய் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.