Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக மிக விரைவில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.

ஆனாலும் சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மிக விரைவில் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடவிருக்கிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரையில் ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது இந்த கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக ஆலோசிக்க படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் மாநிலத்திற்கான பொது நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை, உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்குவது உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version