Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!

வேகமாக வந்த கார் மரத்தின் மீது மோதியதால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா வயது 25. சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை வாடகைக்கு எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அதே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

ரஞ்சிதா, சுராபாத்கான் இருவரும் ஒரே ஊர் என்பதால் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் இருவரும் தாம்பரம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சங்கராபுரம் செல்வதற்காக ரஞ்சிதா தனனுடைய கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு பழவேலி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்த போது அதிவேகமாக காரை ஓட்டிவந்ததால் சுரபாத்கானின் கார் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி மரத்தில் மோதியது.

இதில் ரஞ்சிதா சம்பவ இடத்திலிலேயே கணவர் கண் எதிரேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுராபாத் கானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுராபாத்கான் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஞ்சிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version