Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! 

The car suddenly caught fire while traveling on the road!! Shocked people!!

The car suddenly caught fire while traveling on the road!! Shocked people!!

சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!!  அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! 

மக்கள் நிறைந்த போக்குவரத்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியான இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஈச்சனாரி அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது.  இதன் அடியில் இன்று காலை 11 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் இருந்து அதிக அளவில் கரும் புகை வெளியேறியது.

அதையடுத்து சில நிமிடங்களிலேயே கார் தீப்பிடித்து மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக அதிகளவு கரும்புகை வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பற்றி எரிந்த காரால் அந்த சாலை வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சற்று தள்ளி நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதன் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் செல்லவே அவர்கள் விரைந்து வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை வேகமாக விட்டு தீயை அணைத்தனர். இதில் தீயானது முற்றிலும் அணைக்கப்பட்டு பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இன்னும் அந்த காரில் சென்றவர்கள் விபரம் மற்றும் அவர்களின் நிலை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஓடிக் கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version