ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!
கடந்த 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற தங்களுக்கும் ஊதிய உயர்வுப் பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர் .அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
வழக்கறிஞர்கள் 2006, 2007ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,500 பேரின் பட்டியலையும், எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். மேலும் நீதிபதி இந்த விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.