Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து சில திருப்பங்கள் வந்தது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசியதாக ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியாகி வருகின்றது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் தெரிவிக்கின்றது. மேலும் அந்த வீடியோவில், எதிர்தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என 4 பேர் பங்கேற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version