இரட்டை இலை சின்னம் முடக்கம் – பின்னணியில் பாஜக!! அதிருப்தியில்  எடப்பாடி பழனிசாமி!!

0
279
The case related to the double no sign will be heard in the Chennai court on December 2

AIADMK: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வருகிற டிசம்பர்-2ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ops அணி eps அணி,ttv தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பல துண்டுகளாக உடைந்து. ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை பாஜக எதிர்ப்பு இருந்த அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பின் ops அணி eps அணி என இரு அணியினரை சமாதானம் படுத்தியது. அதன் பிறகு அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

ஆனால் திமுக இந்த தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றியை தழுவியது. அதிமுக தோற்றதற்கு பாஜக வெறுப்பு அரசியல் தான் காரணம் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுகவில் கோஷ்டி பிரிவினை ஏற்பட்டு. அதிமுகவை விட்டு விலகினர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவ்விருவரும் அதிமுக இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வில் வருகிறது.

இந்த சின்னம் தொடர்பான வழக்கு வைத்துக் கொண்டு கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, பாஜக மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு திட்டம் தீட்டுகிறது என்ற கவலையில் அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.