Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!

The cat who was afraid to come down? The husband settled in the palm tree because he was afraid of his wife!!

The cat who was afraid to come down? The husband settled in the palm tree because he was afraid of his wife!!

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!

உத்திரபிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான்  ராம் பிரவேஷ். இவருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருவதுண்டு.அவரின் மனைவிக்கு கோபம் தலைக்கேறி விட்டால் கடுமையாக அடித்தும் உதைத்தும் விடுவாராம்.

வாழ்கையில் குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த அவர் மனைவிக்கு பயந்து போய் பனை மரத்தின் மீது ஏறி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

பனை மரத்தில் வாழும் அவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்பி வருகின்றார்கள்.இப்படியே சுமார் ஒரு மாதமாக அவர் பனைமரத்தில் வாழ்ந்து வருகிறார்.பனை மரத்தில் இருந்து கீழே இறங்கும்படி கிராம மக்கள் அனைவரும் கூச்சலிட்டனர் ஆனால் அவர் இறங்கவில்லை.கீழே இறங்கும் படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்து வருகிறார்.

இதனால் கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு வந்து பார்த்த போலீசார்கள் இந்த பிரச்சினை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version