Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

#image_title

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்.
கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிபறம்பு பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான அசோக் குமார் என்பவரது மகள் ஆதித்யா ஸ்ரீ (8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அதே பகுதியில் கூட்டுறவு வங்கியின் இய்ககுநராக பணியாற்றி வருகிறார். சிறுமி ஆதித்யா தொடர்ந்து செல்போனில் வீடியோ பார்ப்பதை எப்போதும் பழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் செல்போனில் வீடியோ பார்த்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டுக்காக செல்போன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி திடீரென செல்போன் வெடித்துச் சிதறி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக சிறுவர், சிறுமியர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தற்போதுள்ள குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதால், அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் குறைக்க வேண்டும் என்று அறிவுரை தெரிவித்துள்ளனர்.
Exit mobile version