Cyber crime: சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை செய்தது மத்திய அரசாங்கம்.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து இருந்து வாட்ஸ் அப் கணக்குகள் வழியாக நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்தியது உயர்நீதிமன்றம்.
அதாவது ஆன்லைன் தளங்கள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து சட்ட அமலாக்க அதிகாரிகள் போல தங்களை கட்டிக் கொண்டு “டிஜிட்டல் கைது” மோசடி செய்து பணம் பெற்று கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சந்தேகத்திற்குரிய வாட்ஸ்அப் கணக்குகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. எனவே அடுத்த கட்டமாக டெல்லியில் 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியது. மேலும் இது போன்ற குற்றங்களால் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 6 கோடி திருடுபோவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வரை சுமார் 92,334 சைபர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் சுமார் ரூ.2,140 கோடி பணத்தை பொதுமக்கள் சைபர் கிரைமில் இழந்து இருக்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக ஆன்லைன் மோசடிகள் வங்கி கணக்கு எண் அத்துடன் தொடர்புடைய விவரங்களை சேகரித்து பண திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்கள் தங்கள் வங்கி அதிகாரி என்றும் வங்கி கணக்கு தொடர்பாக தகவல்களை சேகரித்து இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.