Tamil Nadu: மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது.
மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்யப்படும் என்றும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு இரண்டு மாதங்களில் நடைபெறும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த மாணவர் மீண்டும் அதே வகுப்பில் ஒரு ஆண்டும் படிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இது நடைமுறை தேசிய கல்விக்கொள்கை சட்டபடி செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த் நடைமுறை செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. மத்திய அரசின் இந்த நடைமுறை குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் “அன்பில் மகேஷ் பொய்யாமொழி” அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கையை பின்பற்றும் பள்ளிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளிகல்வித் துறையின் கீழ் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளிகளில் பழையை 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த தமிழகத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள ஆல் பாஸ் முறையின் வாயிலாக ஏழ்மையாக இருக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை நடுநிலைக் கல்வியைப் பெற முடிகிறது எனக் கூறினார்.