B.F: இனி பி.எப் பணம் எடுக்க ஆதார் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை படுத்தி இருக்கிறது மத்திய அரசு.
அரசு ஊழியர்களுக்கு (pf) வருங்கால வைப்பு நிதி தொடர்பான புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. தற்போது 12 சதவீதம் வரையில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 7 கோடி ஊழியர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.EPF கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்க்க ஆதார் அட்டை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ஆதார் அட்டையை பயன்படுத்த தேவையில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பான் கார்டு 2.O திட்டம் அமல் படுத்தி இருந்த நிலையில்,பி.எஃப் பணத்தை எடுக்க ஆதார் தேவையில்லை என அறிவித்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறியவர்கள், நேபாள குடிமக்கள் மற்றும் பூட்டானின் குடிமக்கள் பணியாளர் போன்றவர்கள் ஆதார் பெற வேண்டிய தேவையில்லை.
ஆனால் புதிய யுஏஎன் உருவாக்கப்பட வேண்டும் என அறிவித்து இருக்கிறது.2025 ஆண்டிற்கு பிறகு ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பி.எப் பணம் எடுக்க முடியும் என்றும் வைப்பு நிதியின் வட்டியை சரிபார்த்து கொள்ள ஏதுவாக புதிய நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் மூத்த குடிமக்கள் எளிதில் பி.எப் பணம் பெற முடியும். இந்த திட்டம் 2025ல் அமலுக்கு வர உள்ளது.