Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்!! மத்திய அரசு எச்சரிகை!!

The central government has issued a warning to the Indians in Syria to leave immediately

The central government has issued a warning to the Indians in Syria to leave immediately

Syria Civil War: சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள்.  சிரியா நாட்டின் அதிபர்  சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் அதிபர் பஷர் அல் அசாத்க்கு  எதிராக அச்சுறுத்தல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் சிரியா நாட்டின் முக்கிய நகரமான அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, அமெரிக்க நாடுகள் உதவி செய்து வருகிறது. சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஈரான் அரசுகள்  இராணுவ உதவிகளை செய்து வருகிறார்கள். இதனால் சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்படத்தொடங்கி இருக்கிறது.

சிரியா நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருதி இந்திய மத்திய அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  தற்போது சிரியாவில் உள்ள இந்தியார்கள் டமாஸ்கஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும். மேலும் அதற்காக அவசர உதவி எண் +963 993385973 (வாட்ஸ்அப்பிலும்) மற்றும் மின்னஞ்சல் ஐடி [email protected] ஆகிய வற்றை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறது.

அந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வணிக விமானங்கள் வாயிலாக தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். சிரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பிற்காக அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.

Exit mobile version