அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?

0
232
#image_title
அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?
மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு  இதுவரை செய்து வந்த அரிசி விற்பனையை நிறுத்தியுள்ளதால் தமிழக ரேஷன் கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு 100 கிலோ எடை உள்ள ஒரு குவிண்டால் அரிசியை 3400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது. பருவ மழை தாமதம் ஆனதால் இந்த விற்பனையை மத்திய அரசு தற்பொழுது நிறுத்தியுள்ளது.
இது குறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் “தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்கு மாதம் 3.40 லட்சம் டன் அரிசி தேவைப்படுகின்றது. அதில் முன்னுரிமை, அந்தியோதயா அமைப்புகளுக்கு தேவைப்படும் 2 டன் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகின்றது.
மேலும் ஒரு கிலோ அரிசி 8.30 ரூபாய் விலையில் 93000 டன் அரிசி கொடுக்கப்படுகின்றது. மீதி 47000 டன் அரிசி வெளிசந்தை விற்பனை திட்டத்தின் கீழ் கிலோ 34 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றது. மத்திய அரசு உடனான ஒப்பந்தத்தின் கீழ் நுகர் பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்  அரிசியாக தமிழ்நாட்டுக்கு தேவையான ஒதுக்கீட்டில் ஈடுசெய்யப்படுகின்றது.
இந்த பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து 40 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. இந்த இருப்பு ஆகஸ்ட் மாதம் வரை போதுமானது. மத்திய அரசு வெளிசந்தை விற்பனை திட்டத்தின் கீழ் வழங்கும் அரிசியை நிறுத்தினாலும் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது” என்று கூறியுள்ளார்.