ADMK BJP: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையால் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய போவதாக அரசியல் களத்தில் சமீப நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிசாமி மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று கூறினாலும் பாஜகவுடன் உடன்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதற்கான சாதகமான பேச்சும் தற்போது வரை காணப்படவில்லை. இப்படி இருக்கையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை வெளியிட்டது குறித்து எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அம் மாநிலம் சார்ந்த பல திட்ட அறிவிப்புகள் இருப்பதாகவும் இது மாயாஜால பட்ஜெட் தாக்கல் என்றும் வஞ்சித்துள்ளார்.
அதேபோல் விவசாயிகளுக்குகென நதிநீர் இணைப்பு திட்டம் போன்ற அறிவிப்புகள் ஏதும் இதில் இடம் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர்களுடைய நிதிநிலை அறிக்கையானது அடித்தட்டு மக்களை மிகவும் வஞ்சித்துள்ளது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மீண்டும் இவர்களின் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு சாதகமான ஏதேனும் திட்டமாவது அறிவித்திருந்தால் அதிமுக சாதகமாக பேச இடம் கிடைத்திருக்கும். மீண்டும் பாஜக தமிழகத்தின் மீது உள்ள எதிர்ப்பையே தெரிவித்துள்ளது.
அப்படி இருக்கையில் இவர்களின் கூட்டணி இணையும் பொழுது ஒட்டுமொத்த எதிர்ப்பும் அதிமுக மீதும் தான் திரும்பும். அப்படி இருக்கையில் சாதகமான கூட்டணியை தேடித்தான் எடப்பாடியின் அரசியல் பயணம் இருக்கும் என கூறுகின்றனர்.