Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசு இந்த விவகாரத்தில் அந்த இரு மாநிலங்கள் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறது! உச்ச நீதிமன்றத்தில் திமுக விலாசல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பின் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு நம்முடைய நாட்டில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது.

இந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட மனுக்கல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தெரிவித்ததாவது,

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலனை மூன்று நாடுகளுக்கு மட்டும் என்று கட்டுப்படுத்துவதில் எந்த விதமான நியாயமும் இல்லை. மற்ற அண்டை நாடுகளிலும் இதே போன்ற துன்புறுத்துறை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் இங்கே அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் இதற்கு சொலிசிட்டர் ஜெனரலிடம் பதில் இல்லை. அசாம் மற்றும் திரிபுராவை பற்றி மட்டுமே மத்திய அரசு கவலை படுகிறது என்று அவர் வாதிட்டார்.

Exit mobile version