Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இன்டர் நெட் சிக்னல் கட் ஆகாது!! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The central government is taking various measures to improve telecommunication in India

The central government is taking various measures to improve telecommunication in India

Digital Bharat Fund Scheme: இந்தியாவில் தொலைத்தொடர்பு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு  வருகிது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இணைய சேவை முடங்கினால் உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. உணவகங்களில் உணவு ஆடர் செய்வது முதல் மாணவர்கள் கல்வி கற்பது வரை மொபைல் போன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே இணையத்தின் இணைப்பு இருந்தால் நாம் அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்த பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் தற்போது நகர்புறங்களில் 5ஜி இணைய சேவை கிடைத்து வருகிறது. இருப்பினும் பல பகுதிகள் இணைய சேவை கிடைப்பது இல்லை. எனவே நாட்டின்  அனைத்துப் பகுதிகளிலும் சீராக இன்டர்நெட் கிடைத்திட டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக நாட்டின் எல்லைப் பகுதிகள், வடகிழக்கு பிராந்தியம், மலை பிரதேசங்கள், போன்ற பகுதிகளில் மொபைல் சேவை வழங்குவது அதன் முதன்மை நோக்கமாக அமைந்து இருக்கிறது. மேலும் இந்தியாவின் கடல் பகுதியில் அமைந்துள்ள, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு தீவுகளில் மொபைல் சேவையைவழங்க இருக்கிறது.

மேலும்  இணைப்புக்கான விரிவான தொலைத்தொடர்பு மேம்படுத்தும்  வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான இணைய சேவை கிடைக்கும்.

Exit mobile version