Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!

விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மஜக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

எனவே இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக ஒரு வாரகாலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது இந்த நிலையில் நாடு முழுவதுமான விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு இப்போது போராட்டம் நடத்தி வருவது நாடு முழுவதும் ஆதரவு பெற்று வருகின்றது இந்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்று வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அவர்கள் கூறும் விளக்கங்களை ஏற்று இந்த சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் விவசாயிகளுடைய அவர்களின் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version