ஒன்றிய அரசின் கீழ் தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க ஸ்லாஸ்(SLAS- State Level Achievement Survey)தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை பொறுத்து மாணவர்களின் கல்வி தொகுப்பை மாற்றியமைக்கவும், தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது பெரிதும் பயன்படும் என்று இத்தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் 3, 5, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி நான்கு முதல் ஆறாம் தேதி வரை மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இத்தேர்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 கேள்விகளும், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 கேள்விகளும் மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 50 கேள்விகளும் இடம்பெறும். இதற்கு மாணவர்கள் ஓஎம்ஆர் சீட்டில் பதிலளிக்க வேண்டும். தேர்வு இன்று நடக்குமாயின், நேற்று மாவட்ட வளமையத்தில் இருந்து வினாத்தாள்களை தலைமை ஆசிரியர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த பின்னர் வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் விடைத்தாள்களை ஆசிரியர்களிடம் இருந்து பெற்று வளமையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன்னர் மாணவர்களுக்கு தேர்வு எழுத தேவைப்படுகின்ற ரூம்களை அலர்ட் செய்யவும், இருக்கை வசதிகளையும் மற்றும் தேர்விற்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நாளில் மாணவர்களின் புகைப்படத்தை எடுத்து குழுவில் பகிர கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறாமல் தேர்வை முறையாக நடத்தி வைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.