2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்து வருகிறது.
தொட்டா சிணுங்கி, தலைமுறை, தூண்டில் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கே எஸ் அதிகமானவர்கள் 13 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். இத்திரைப்படம் முழுவதும் பெண்களை மையமாகக் கொண்டது என்பதால் நடிகை ரேவதி அவர்களை சந்தித்து கால்ஷீட் பெற்றுள்ளார்.
இவருக்கு ஜோடியாக மாதம்பட்டி ரங்கராஜ் சரியாக இருப்பார் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டு , மாதம்பட்டி அவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்பொழுது மாதம்பட்டி அவர்கள் என்னிடம் ஒரு தயாரிப்பாளர் உள்ளார் என்றும் இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இயக்குனர் கே எஸ் அதியமானிடம் தெரிவித்திருக்கிறார்.
உடனே இயக்குனர் அவர்கள் நேராக தயாரிப்பாளரிடம் வந்து நடந்தவற்றை கூற, அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் இத்திரைப்படத்திற்கு ஹீரோவை மாற்றி விடுங்கள் என்று கூறிவிட்டாராம். எனவே தற்பொழுது இயக்குனர் கே.எஸ் இயக்குனர் கே எஸ் அதியமான் அவர்கள் இத்திரைப்படத்திற்கு புதிய ஹீரோவை தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவலினை நமக்கு முழுமையாக தெரியப்படுத்தியது பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். மேலும் இவர் இந்த தகவலினை King 24X7 யூடியூப் சேனலில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.