Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். லெபனான் நாட்டின் வரலாற்றில் இந்த வெடிவிபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசால் நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியது தொடர்பாக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் அதிபர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக ’டீதிருடன்’ என்ற ஹேஸ்டேக் லெபனானின் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆக மாறியது. சமூகவலைதளவாசிகள் இந்த ஹேஸ்டேக் மூலம் லெபனான் அதிபரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
Exit mobile version