Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவு பெற்றது! அதன் சிறப்பம்சங்கள்!

இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவு பெற்றது! அதன் சிறப்பம்சங்கள்!

கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி சந்திராயன் 2 தனது சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து ஒரு வருடம் முடிந்துள்ளது.ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

சந்திராயன் 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்ட் ,ரோவர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து பிரக்யான் சுவருடன் கூடிய விக்ரம் லாண்டரிடமிருந்து தனியாக பிரிக்கப்பட்டது.

அண்டை நாட்டினர் நிலவின் வடதுருவத்தில் மட்டுமே தரையிறக்க முடிவு செய்வார். ஆனால் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிட்டது. திட்டமிட்டபடி லேண்டர் தரை இறங்கபடாமல் மேற்பரப்பில் மோதியது. இதனால் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் லேண்டர் செயல்களில், ஆர்பிட்டர் செயலும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
தற்பொழுது வரை தொலைத் தொடர்பில் இருக்கும் ஆர்பிட்டர் ,நிலவில் தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி கொண்டிருக்கிறது. சுமந்து சென்ற லேண்டர் வெற்றி பெறவில்லை என்றாலும், எட்டு அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆர்பிட்டர் வெற்றியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வைக்கப்பட்டது. இது நிலவை 4,400 முறை சுற்றி வந்துள்ளதாகவும் ,தற்பொழுது அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/isro/status/1296432724916482048?s=19

சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. இதன்மூலமாக சந்திரனின் நிலப்பரப்பு, மேற்பரப்பு வேதியியல் கலவை, கனிமவியல், வெட்பம், இயற்கையில் பண்புகள், போன்ற ஆய்வு மூலம் நாம் அறிந்துகொள்ள எழுவதாக சந்திராயன் 2 செயல்படுவதாக இஸ்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன் அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்துள்ளது.

Exit mobile version