Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்!  ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்! 

#image_title

சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்!  ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்! 

சான்றிதழ் தர காலதாமதம் செய்த கல்லூரி பெண் முதல்வரை மாணவர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சான்றிதழ் தர காலதாமதம் செய்ததால் பார்மசி கல்லூரி மாணவன் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே தனது முதல்வரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிஎம் பார்மசி கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவரான சந்தோஷ் தனது கையில் பெட்ரோல் கேனை ஏந்தியபடி கல்லூரி வளாகத்திலும் உள்ளே நுழைந்தார். அங்கு நின்று கொண்டிருந்த தனது கல்லூரி முதல்வரை கண்டதும் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தான் வைத்து இருந்த சிகரெட் லைட்டரால் தீ வைத்துவிட்டு தப்பித்து ஓடி விட்டான்.

இந்த தீ விபத்தில் முதல்வரான 90% தீ காயங்களுடன் விமுக்தா ஷர்மா வயது 64 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்தில் மாணவனுக்கும் காயம் ஏற்பட்டது. அவன் அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பி ஓடி பள்ளத்தாக்கு ஒன்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளான். அப்போது போலீசார் காப்பாற்றி அவனை கைது செய்துள்ளனர்.

பி பார்மசி படித்து வரும் மாணவனான சந்தோஷ் தனது 7-வது மற்றும் 8-வது செமஸ்டரில் அரியர் வைத்துள்ளான். இதனால் முதல்வர் மதிப்பெண் சான்றிதழை தராமல் தாமதம் செய்ததால் இவ்வாறு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version