கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க!!

0
86

 

கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க…

 

கேரளம் மாநிலம் மோசடி வழக்கு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க கட்சி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கேரளம் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன்(முதல்வர்) அவர்களின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சி.எம்.ஆர்.எல் அதாவது கொச்சி தாதுப் பொருள்கள் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரி சமரச வாரியம் அறிவித்தது.

 

இதையடுத்து இந்த மோசடி வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மகள் வீணா அவர்களுடன் சேர்த்து முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியுள்ளார்.

 

இது குறித்து பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் அவர்கள் “கேரளம் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் மகள் வீணா அவர்கள் ‘எக்சாலாஜிக் சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்துடம் ஒப்பந்தம் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

ஒப்பந்தம் செய்த பின்னர் 2017 ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை எந்தவித தகவல் தொழில்நுட்ப சேவையும் வீணா அவர்களின் எக்சாலாஜிக் நிறுவனம் வழங்கவில்லை. ஆனால் 1.72 கோடி ரூபாய் பணம் மட்டும் வீணா அவர்கள் நடத்தி வரும் எக்சாலாஜிக் நிறுவனத்திற்கு மாதத் தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரி சமரச வாரியம் அறிவித்தது.

 

இந்த மோசடி வழக்கில் வீணா அவர்களிடமும், முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடமும் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களுக்கு 95 கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடி வழக்கில் முழு விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.