Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!!

#image_title

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்வீர்களா என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் பாஜக கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

கள்ளச்சாரயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசுவாமி அவர்கள் “யூனியன் பிரதேசங்களின் ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைப்பதை மோடி அரசு வேலையாக வைத்துள்ளது. அதிகாரிகள் நிர்வகிக்கும் அதிகாரம்  இல்லை என்றால் துணைநிலை ஆளுநரை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் செயல்படுகிறார்.

முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் ஏன் என்ன என்று கூட கேட்காமல் நீட்டப்படும் கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகாரம் என்று டெல்லி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு புதவை உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.

விஷச்சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனால் புதுவையில் இருந்துதான் சென்றுள்ளது. தமிழக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு தைரியம் இருந்தால் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்யலாமே. பாஜக கட்சியினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்” என்று சரமாரியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Exit mobile version