Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!

கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது அதிசியம். இப்படி நடந்த பல விசயங்கள் அந்த குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

கர்நாடகாவில் உள்ள ஹோசாபெட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்து அதிசிய குழந்தையாகப் பார்க்கப்படுகிறது . இடது காலில் மட்டும் 9 விரல்கள்.

 

குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என தெரிவித்து உள்ளனர். அந்த விரல்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. என தெரிவித்து உள்ளனர்.

 

இந்நிகழ்வை பற்றி மருத்துவர்கள் கூறியதாவது, இது மிகவும் அதிசியம் என்றே கூறலாம். தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர். நாங்கள் குழந்தையை விரலை ஸ்கேன் செய்து பாதிப்பு இல்லை என பெற்றோர்களுக்கு புரிய வைத்துள்ளோம். குழந்தை வளரும் போது 9 விரல்களுடன் நடக்க பழகி கொள்ளும் என தெரிவித்தனர்.

 

 

Exit mobile version