Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The child died tragically! The people of the area are sad!

The child died tragically! The people of the area are sad!

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

உத்திரபிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(35).இவருடைய மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு ஆயிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில்  ஆயிஷாவை அழைத்து செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல அப்துல் ரகுமான் ,ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தையும் அழைத்து சென்றனர்.

அப்போது அவர்கள் தறிப்பட்டறையில் ஒரு பகுதியில் குழந்தையை தூங்க வைத்துள்ளனர். நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது.அப்போது பட்டறையின் அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து கல் , தறிப்பட்டறையின்  சிமெண்ட் ஓட்டில் மேல் விழுந்தது. அப்போது அந்த சிமெண்ட் ஓடு தூங்கிக் கொண்டிருந்து குழந்தை ஆயிஷா தலை மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த குழந்தை உயிருக்கு போராடினார் . உடனடியாக  ஆயிஷாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் கூறினார்கள். மேலும் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version