Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!

The child left at the temple! The action taken by the villagers!

The child left at the temple! The action taken by the villagers!

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!

நவீனமயமான காலத்தில், நிறைய தம்பதிகள் குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள். சிலரோ குழந்தை இன்மைக்கு நிறைய மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்து காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பலர் தன குழந்தைகளை கொன்றோ அல்லது குப்பை தொட்டியில் சர்வசாதரணமாக வீசி விட்டு செல்கின்றனர். அப்படி யாரோ ஒருவர் இந்த செய்தியில் கூட குழந்தையை கோவிலில் விட்டு சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில், ஆரணி பாளையம் காந்தி ரோட்டில், உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் நவகிரக சன்னதி அருகே பிறந்து சுமார் 3 மாதமே ஆன ஆண் குழந்தை, ஒன்று புத்தம் புதிய உடைகள் அணிவிக்கப்பட்டு விட்டு சென்றுள்ளனர்.

அதன் பின் நீண்ட நேரமாகியும் குழந்தையை யாரும் தூக்க வராதது, கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனை தொடர்ந்து அவர்கள்  ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர், ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண்குழந்தையை மீட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் குழந்தையை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்தது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் குழந்தையை விட்டுச் சென்றது யார்? ஏன் விட்டுச் சென்றனர்? குழந்தையை கடத்தி வந்து விட்டுச் சென்றார்களா? அல்லது கள்ள உறவில் பிறந்த குழந்தையா? அல்லது வறுமையின் கொடுமையில் விட்டுச் சென்றார்களா? என பல கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version