Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!!

#image_title

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!!

கே. பாலச்சந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

இதனை தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு என்ற திரைப்படமானது 1 9 8 0 ல் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இதில் கமலஹாசன் ,ஸ்ரீதேவி போன்ற ஏராளமான திரைப்பிரபலங்கள் நடித்து அசத்தியிருப்பார்கள். அந்தவகையில் இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு நண்பனாக நடித்தவர் தான் திலீப்.இவரது பிறப்பிடம் சென்னை. இவருக்கு சிறுவயதிலிருந்தே கலையின் மேல் அதீதக் காதல்.அந்த காரணத்தினால் அவர் படிக்கும் போதே நடனம் மற்றும் நடிப்பினை பயின்றார்.

அந்த வகையில் அவரது பள்ளியில் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடித்தார்.அந்த கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் தான் கே.பாலச்சந்தர்.திலீப் அவர்களின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து போனார் பாலச்சந்தர்.

கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் திலீப் அவர்களை தனியாக வரச் சொல்லி விசாரித்தார்.விசாரித்த போது திலீப் அவர்களுக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தது, கே .பாலச்சந்தர் அவர்களுக்கு தெரியவந்தது.

பாலச்சந்தர் அவர்கள் அப்போது தான் வறுமையின் நிறம் சிகப்பு, என்ற திரைப்படத்தை தொடங்கினார். இதை சரியாக பயன்படுத்தும் விதமாக திலீப் அவர்களுக்கு அப்படத்தில் நடிக்க வாய்ப்பு ஒன்றினை தந்தார்.

அந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு நண்பனாக நடித்து, மக்கள் மனதில் நீங்காயிடம் பிடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல திரைப்படங்களின் நடிக்க வாய்புகள் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

ரங்கனின் நண்பனான நடித்த திலீப் அவர்களின் திரைப்பட பயணத்திற்கு பின்னால் இப்படிபட்ட ஒரு சுவாரசியமான சம்பவம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தச் செய்கிறது.

Exit mobile version