இந்தியாவில் வால் நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்

0
225

இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை ஆகிய இரு நாட்களுக்கு வால் நட்சத்திரம் தெரியும் மேலும் இந்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

இந்த வால் நட்சத்திரத்திற்கு நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த வால் நட்சத்திரம் நாளை மாலை சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்.பூமிக்கு அடியில் புற ஊதா கதிர்களின் ஆற்றல் பரவலை குறிக்கும் வகையில் இதற்கு நியோவைஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

இது முதன் முதலாக பிரான்ஸ் நாட்டின் மான்ட்லுகன் பகுதியில் கடந்த மாதம் 8 ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு தெரிந்துள்ளது.இந்த தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி அன்று பூமிக்கு மிக அருகாமையில் இந்த வால்நட்சத்திரம் சுமார் 103 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.

மேலும் இந்த வால் நட்சத்திரமானது கடந்த மார்ச் மாதம் நாசா தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வால்நட்சத்திரம் அதன் சுற்றுப் பாதையை முடிக்க சுமார் 6800 ஆண்டுகள் ஆகும்.எனவே இதனை மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகே காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.