Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு !

#image_title

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு!!
விடுதலை படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை ரசிகர்களிடத்தில் நிரூபித்து காட்டிய நடிகர் சூரிக்கு கதாநாயகன் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க படம் விடுதலை. நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு தலைசிறந்த படம் விடுதலை.  நடிகர் சூரி அவர்களுக்கு, அவரின் திரையுலக வாழ்வில் மிகமுக்கிய படமாக இப்படம் அமைந்துள்ளது.
படத்தின் கதையும், படம் உருவான விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
 படத்தின் நடிகர் சூரி அவர்களின் நடிப்பு முன்னணி நடிகர்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முதல் படத்திலேயே, தனது அபாரமான நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் சூரி. இதையெடுத்து தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் நடிகர் சூரியின் அலுவலகத்தை கதை சொல்வதற்காக தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடிக்க, நடிகர் சூரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அத்துடன் இயக்குநர்கள் விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் சூரி. இது தவிர மற்றொரு படத்தில் அவர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஆக மொத்தமாக நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில்  படு பிஸியான கதாநாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய அடுத்த படமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் ரசிகர்களை கவர வேண்டும் என்றும் மிகுந்த கவனத்துடன் தனது அடுத்த படத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.
Exit mobile version