Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

#image_title

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களை கவர்வதற்கும் ஓட்டுகளை சேகரிக்கவும் அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது, அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றப்பெற்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் நிதி உதவி மற்றும் மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் 50% இடங்கள் வழங்கப்படும், அங்கன்வாடி, சத்துணவுத்திட்ட பணியாளர்களின் ஊதியத்திற்க்காக மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாகும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளை அடுக்கி வருவது சகஜம்தான் ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதனை நிறைவெற்றுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது, எனவே சொல்கின்றபடி அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version