Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய ராணுவத்திற்கு 200 ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம்-நடிகர் அஜித்தை ஆலோசகராக கொண்ட குழு அசத்தல்!

இந்திய ராணுவத்திற்கு 200 ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம்-நடிகர் அஜித்தை ஆலோசகராக கொண்ட குழு அசத்தல்!

இந்திய ராணுவத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சுமார் 165 கோடி மதிப்பீட்டில் 200 ட்ரோன்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா குழு பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித்,நடிப்பில் மட்டும் கைதேர்ந்தவர் அல்ல.அவற்றையும் தாண்டி பல துறைகளில் சாதித்து வருகிறார்.மேலும் இவர் ஒரு சிறந்த பைக் ரேசர் மற்றும் கார் ரேசர் ஆவார்.இவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கு பெற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார்.மேலும் இவர் ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் உடையவர்.

மேலும் இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தொழிநுட்ப வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றார்.இவர் தலைமையில் இயங்கி வரும் தக்‌ஷா மாணவர்கள் குழு இந்தியாவில் முதன் முறையாக வானில் பறக்கும் ஏர் டாக்ஸியை தயாரித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மருத்தவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா குழு போட்டியில் கலந்து கொள்ள தேர்வானது.மொத்தம் 55 நாடுகள் பங்கேற்ற நிலையில் 11 ஆளில்லா குட்டி விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வானது.இதில் தக்‌ஷா குழு 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது
மேலும் இக்குழு சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இக்குழு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநிலத்தின் பெரும் பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டது.இவர்களின் பணி தமிழக அரசுக்கு பெரும் உதவியாக இருந்தது.மேலும் தக்‌ஷா குழுவின் இந்த முயற்சி பலரது பாராட்டையும் பெற்றது.

இவ்வாறு பல சாதனைகளை படைத்தது வரும் தக்‌ஷா குழுவின் விடா முயற்சியின் பலனாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் தற்பொழுது ஒரு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.சுமார் 165 கோடி மதிப்பீட்டில் 200 ட்ரோன்கள் தயாரித்து 12 மாதங்களில் வழங்கும் ஒப்பந்தத்தை இந்திய
ராணுவம் தக்‌ஷா குழுவிற்கு வழங்கியுள்ளது.

இவ்வாறு பல சாதனைகளை படைத்து வரும் இக்குழு கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்து வழங்கும் பணிக்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version