வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இவற்றிலிருந்து பலவகைகளில் முன்னேறி வருகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இத்தொற்றின் வீரியமானது முதல் அலை,இரண்டாம் அலை என முன்னேறி செல்கிறது. தற்பொழுதும் மூன்றாவது அலையை நோக்கி செல்ல உள்ளது.அதனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
அதில் முதல் கட்டமாக ஒரு கொரோனா தடுப்பு மருந்தை அனைவரும் செலுத்தி கொள்ளவேண்டும் என்று கூறி வருகின்றனர்.தற்போதைய தடுப்பூசி ஆனது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்பொழுது உள்ளது.குழந்தைகளுக்கு இன்று வரை தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் பாதிப்பை உணர்ந்து மக்கள் பெரும்பாலானோர் தற்பொழுது தடுப்பூசி போட முன் வந்து விட்டனர்.
இதில் தடுப்பூசி போடாதவர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே,அதனால் மூன்றாவது அலை குழந்தைகளை அதிக அளவு பாதிக்கும் என கூறுகின்றனர்.அதனை தடுக்க தற்பொழுது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு இம்மாதம் முதலிலேயே விண்ணப்பித்தது.அதனையடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன விண்ணப்பித்த தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தற்பொழுது ஜான்சன் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டோஸ் தடுப்பூசி 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் மீது பரிசோதிக்க மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாடு அமைப்பிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளது.மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டால் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது தடுப்பூசி பரிசோதனை செய்து,கூடிய விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனக் கூறுகின்றனர்.